காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள் கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகளும், சசி தரூர் 1,072
வாக்குகளும் பெற்றிருந்தனர். இதனால், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மல்லிஜார்ஜுன கார்கேவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். அவரின் எதிர்காலம் இனிமையானதாக அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.