பாஜக மற்றும் மாநிலக் கட்சிகளிடம் ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை? - ராகுல் காந்தி

பாஜக மற்றும் மாநிலக் கட்சிகள் தங்கள் கட்சித் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தாதது ஏன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 
பாஜக மற்றும் மாநிலக் கட்சிகளிடம் ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை? - ராகுல் காந்தி

பாஜக மற்றும் மாநில கட்சிகளிடம் உள்கட்சித் தேர்தல் குறித்து ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப்பயணம்  மேற்கொண்டு வருகிறார். நேற்று ஆந்திரம் சென்றுள்ள அவர், காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுடன் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

ஆந்திர மாநிலம் அடோனியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, 'நாட்டில் கட்சிக்குள் தேர்தல் நடத்தும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். இதற்கென தேர்தல் ஆணையம் கொண்டுள்ள ஒரே அரசியல் கட்சியும்தான். மிகவும் வெளிப்படையாகவே தேர்தல் நடத்துகிறோம். ஆனால், காங்கிரஸ் தேர்தல் குறித்து எல்லாரும் கேள்வி கேட்கிறார்கள். வெளிப்படையான தேர்தல் நடத்திய காங்கிரஸ் கட்சி குறித்து பெருமைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சியிடமே தொடர்ந்து கேள்வி முன்வைக்கப்படுகிறது. தேர்தல் நடத்தாத பாஜக மற்றும் மாநில கட்சிகளிடம் ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை'  என்று பேசினார்.

மேலும், 'கட்சியில் தனக்கு என்ன பதவி என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே முடிவு செய்வார். காங்கிரஸ் தலைவரின் பங்கு குறித்து அவர் தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பார்' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com