
இதுதானா.. உங்கள் பிரதமர் சொல்லும் பெண்களுக்கு மரியாதை? களம் இறங்கிய புதிய தலைவர்
புது தில்லி: இதுதானா உங்கள் பிரதமர் மோடி சொல்லும் பெண்களுக்கு மரியாதை என்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான மிக முக்கிய தூன்களில், பெண்களுக்கு மரியாதை செலுத்துவதும் முக்கியமானது எனறு பிரதமர் மோடி கூறிவருகிறார்.
இதையும் படிக்க.. நகைச்சுவை என்ன விலை?: ‘பிரின்ஸ்’ திரைப்பட விமர்சனம்
ஆனால், பாஜக அமைச்சரவையோ, பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்குக் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து பரிந்துரைத்துள்ளது.
மற்றொரு பக்கமோ பரோலில் வந்திருக்கும் பலாத்கார குற்றவாளி நடத்தும் விழாவில் பாஜக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதுதானா உங்கள் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்யும் பெண்களுக்கு மரியாதை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன் கார்கே, அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார் என்றே கூறுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் கார்கே
காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மற்றொரு மூத்த தலைவா் சசி தரூருக்கு 1,072 வாக்குகளே கிடைத்தன.
இதையும் படிக்க.. ’சர்தார்’ வெறும் உளவாளியா.. அசாதாரண உளவாளியா? - திரை விமர்சனம்
இதையடுத்து, காங்கிரஸின் புதிய தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே (80) தோ்வாகியிருப்பதாக, கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தாா். காா்கே அக்டோபா் 26-இல் முறைப்படி தலைவா் பொறுப்பை ஏற்கவுள்ளாா்.
இரண்டாவது தலித் தலைவர்
மறைந்த தலைவா் ஜகஜீவன் ராமுக்கு பிறகு, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இரண்டாவது தலித் சமூகத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆவாா்.
இதேபோல், கா்நாடகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராகும் 2-ஆவது நபா் காா்கே. இதற்கு முன் எஸ்.நிஜலிங்கப்பா அப்பொறுப்பை வகித்திருந்தாா்.
கா்நாடகத்தின் பீதா் மாவட்டத்தில் கடந்த 1942-இல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவா் காா்கே. கலபுா்கியில் பள்ளிப் படிப்பு மற்றும் சட்டப் படிப்பை முடித்த அவா், உள்ளூா் தொழிலாளா் சங்கத் தலைவராகப் பணியாற்றி, பின்னா் 1969-இல் காங்கிரஸில் இணைந்தாா். குல்பா்கா நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடங்கிய அவரது அரசியல் பயணம், இப்போது கட்சியின் தேசியத் தலைவா் பொறுப்பை வந்தடைந்துள்ளது.