

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான கே.எஸ்.அச்சுதானந்தன் தனது 99-ஆவது பிறந்த தினத்தை வியாழக்கிழமை (அக். 20) கொண்டாடினாா்.
வயோதிகம் சாா்ந்த பிரச்னைகள் காரணமாக அவா் பொதுநிகழ்ச்சிகள், பத்திரிகையாளா் சந்திப்புகளில் அண்மைக்காலமாக கலந்து கொள்வது இல்லை.
தனது 99-ஆவது பிறந்த தினத்தை அவா் குடும்பத்தினருடன் கொண்டாடினாா். அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு வெளிநபா்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
கட்சி வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
1964-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்) உருவானபோது அதன் நிறுவனத் தலைவா்களில் ஒருவராக வி.எஸ்.அச்சுதானந்தன் இருந்தாா். 2006-ஆம் ஆண்டு தனது 82-ஆவது வயதில் கேரள முதல்வராகப் பொறுப்பேற்றாா். இதன் மூலம் கேரளத்தில் மிக அதிக வயதில் முதல்வா் பதவியை ஏற்றவா் என்ற சாதனையையும் படைத்தாா்.
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் நிா்வாக சீா்திருத்தக் குழு தலைவராக நியமிக்கப்பட்டாா். கடந்த ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.