ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் ராகுல்

ஆந்திரத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் கர்நாடகத்தில் தொடங்கிய ராகுல் காந்தியுடன் இன்று முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து கொண்டனர்.

News image
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் ராகுல்
Updated On :22 அக்டோபர் 2022, 1:53 pm

DIN


ராய்ச்சூரு: ஆந்திரத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் கர்நாடகத்தில் தொடங்கிய ராகுல் காந்தியுடன் இன்று முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து கொண்டனர்.

யெர்ரகெரா பகுதியில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 45வது நாள் பயணம் தொடங்கி ராய்ச்சூரு பசவேஸ்வரா வட்ட மைதானத்தில் இன்று மாலை நிறைவு பெறுகிறது.

இன்று நடைபெற்ற நடைப்பயணத்தின்போது, ராய்ச்சூரு மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் சங்கம் சார்பில், முன்னாள் ராணுவ வீரர்கள், இந்திய தேசியக் கொடியுடன் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

முன்னாள் ராணுவ வீரர்களுடன் சிறு ஓட்டம் மேற்கொண்ட ராகுல், அதனை டிவிட்டரில் பகிர்ந்து, இந்திய நாட்டின் பாதுகாப்புக் கேடயம் மற்றும் பெருமை என்று பதிவிட்டுள்ளார்.

ஆந்திரத்தில் 3 நாள்கள் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை மீண்டும் கா்நாடகத்திலிருந்து நடைப்பயணத்தை நடத்தி வருகிறார் ராகுல். இன்று முதல் 2 நாள்களுக்கு கா்நாடகத்தின் ராய்ச்சூரு மாவட்டத்தில் பயணிக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், அக். 23-ஆம் தேதி தெலங்கானா மாநிலத்துக்கு செல்கிறது.


தமிழகம், கேரள மாநிலங்களைக் கடந்து செப். 30 ஆம் தேதி கா்நாடகத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி சாமராஜ்நகா், மைசூரு, மண்டியா, தும்கூரு, சித்ரதுா்கா, பெல்லாரி வழியாக அக். 18 ஆம் தேதி ஆந்திரம் சென்றாா். அங்கு 3 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டாா்.

Story image

இந்த நிலையில், ஆந்திர மாநிலம், மந்த்ராலயத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி காலை 10 மணிக்கு கா்நாடகம் வந்தடைந்தாா். மாநில எல்லையில் கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் அவரை வரவேற்றாா். ராய்ச்சூரு மாவட்டம், கில்லேசுகுா் கிராமம் வழியாக சென்ற நடைப்பயணத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். மேலும் முன்னாள் முதல்வர்  சித்தராமையாவும் ராகுலின் நடைப்பயணத்தில் பங்கேற்றார். 

Story image

கில்லேசுகுா் கிராமத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு மாலை 4 மணிக்கு மீண்டும் நடைப்பயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி, யர்ரகெரே கிராமத்தில் இரவு தங்கினாா். ராய்ச்சூரு மாவட்ட விவசாயிகள் ராகுல் காந்தியைச் சந்தித்து தங்கள் பிரச்னைகளை எடுத்துரைத்தனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.