
கோப்புப்படம்
புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,112 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,112 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,987 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | எனக்கு தெரியும், நீங்கள் அன்புக்காக அனைத்தையும் செய்தீர்கள்: சோனியா குறித்து பிரியாங்கா உருக்கம்!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,892 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,97,072 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,821 ஆகக் குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,58,84,786 டோஸ் தடுப்பூசிகள் (95.01 கோடி இரண்டாவது டோஸ் மற்றும் 22.05 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்) செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,22,555 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.