அந்தக் கடைசி காஷ்மீரி பண்டிட்டும் கிளம்பிவிட்டார்..

ஷோபியான் மாவட்டம் சௌதாரிகுந்த் கிராமத்தில் வசித்து வந்த கடைசி காஷ்மீரி பண்டிட்டான டோல்லி குமாரியும், தனது வீட்டை காலி செய்து கொண்டு ஜம்முவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.
அந்தக் கடைசி காஷ்மீரி பண்டிட்டும் கிளம்பிவிட்டார்..
அந்தக் கடைசி காஷ்மீரி பண்டிட்டும் கிளம்பிவிட்டார்..


ஜம்மு: ஷோபியான் மாவட்டம் சௌதாரிகுந்த் கிராமத்தில் வசித்து வந்த கடைசி காஷ்மீரி பண்டிட்டான டோல்லி குமாரியும், தனது வீட்டை காலி செய்து கொண்டு ஜம்முவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

வியாழக்கிழமை மாலை, தனது வீட்டை பூட்டிக் கொண்டு அவர் ஜம்முவுக்கு இடம் பெயர்ந்திருப்பதன் மூலம், அந்த கிராமத்தில் இருந்த ஏழு காஷ்மீரி பண்டிட்டுகள் குடும்பத்தில், கடைசி காஷ்மீரி பண்டிட்டும் ஊரை காலி செய்துவிட்டதை உறுதி செய்திருக்கிறது.

காஷ்மீரி பண்டிட்டுகளை குறி வைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கிருக்கும் காஷ்மீரி பண்டிட்டுகள் குடும்பத்துடன் ஜம்முவுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

அங்கு சூழ்நிலையே அச்சம் தருவதாக இருக்கிறது. நான் வேறு என்னதான் செய்ய முடியும் என்று கடைசியாக ஊரை காலி செய்த டோல்லி மன வருத்தத்துடன் கூறுகிறார்.

அக்டோபர் 15ஆம் தேதி காஷ்மீரி பண்டிட் பூரன் கிரிஷன் பட் சௌதாரிகுந்த் கிராமத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பு சோடிகாம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு காஷ்மீரி பண்டிட்டும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சொல்லுங்கள்.. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, அடுத்து நீங்கள்தான் என்ற ஒரு நடுக்கம் ஏற்படாதா என்றும் டோல்லி கேள்வி எழுப்புகிறார்.

இதனால், அந்தக் கிராமத்தில் இருந்த பண்டிட்டுகளின் வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன. தங்களது ஆப்பிள் தோட்டங்களில் விளைந்த ஆப்பிள்கள் விற்பனையாகும் வரை கூட அவர்கள் வீட்டில் தங்கியிருக்க நினைக்கவில்லை.

தங்கள் வீட்டின் கொள்ளைப்புரத்தில் ஆயிரக்கணக்கான பெட்டிகளை விடுவிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ள முஸ்லிம்களிடம் ஆப்பிள்களை சந்தையில் கொண்டு போய் சேர்த்துவிடுமாறு கூறிவிட்டு கண்ணீருடன் வாழ்ந்து வந்த பகுதிகளை வீட்டு வெளியேறிவிட்டனர்.

இதுவரை சௌதாரிகுந்த் மற்றம் சோடிபோரா கிராமத்தில் 11 பண்டிட் குடும்பங்கள் வசித்து வந்தன. இப்போது அனைவரும் ஜம்முவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com