ஹிமாசலில் எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் அலையைத்தான் பார்க்கிறேன்: ராஜீவ் சுக்லா

ஹிமாசலில் எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் அலையைத்தான் பார்க்கிறேன் என்று காங்கிரஸ் எம்பியும், ஹிமாசல மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
ஹிமாசலில் எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் அலையைத்தான் பார்க்கிறேன்: ராஜீவ் சுக்லா

ஹிமாசலில் எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் அலையைத்தான் பார்க்கிறேன் என்று காங்கிரஸ் எம்பியும், ஹிமாசல மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஹிமாசலில் பெரும்பாலான காங்கிரஸ் கிளர்ச்சி வேட்பாளர்கள் தங்கள் பெயர்களை வாபஸ் பெற்றுள்ளனர். இது எங்களுக்கு ஒரு பெரிய சாதனை. அவர்களும் கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். மக்கள் எங்களின் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். பாஜகவிடம் அபரிமிதமான பணம் உள்ளது. அவர்களிடம் பண பலமும் அதிகாரமும் உள்ளது. 

ஹிமாசலப் பிரதேச மக்கள் படித்தவர்கள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள், பணத்துக்காக வாக்குகளைக் கொடுக்க மாட்டார்கள். மக்கள் தற்போதைய அரசை அகற்றி எங்களை ஆட்சிக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். ஹிமாசலில் 50 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம். எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் அலையைத்தான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல் நவம்பா் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த அக்.17-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், அக்.25-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளான சனிக்கிழமை, 92 போ் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதையடுத்து மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 413 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 

தோ்தல் முடிவுகள் டிச.8-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ் பிரதான போட்டியாளா்களாக உள்ள நிலையில், புது வரவாக ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com