நவம்பர் 8ல் முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்க முடியுமா?

நவம்பர் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடையும் முழு சந்திர கிரகணத்தை தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
நவம்பர் 8ல் முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்க முடியுமா?
Updated on
1 min read


நவம்பர் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடையும் முழு சந்திர கிரகணத்தை தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

முழு சந்திர கிரகணம் என்றால் என்ன?
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. முழு சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழலின் இருண்ட பகுதி அல்லது குடைக்குள் முழு சந்திரனும் விழும் ஒரு நிகழ்வாகும். உலகின் பல பகுதிகளில் கடந்த 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழந்தது. 

ஒரு கிரகண காலம் என்பது தோராயமாக 35 நாள்கள் ஆகும், இதில் குறைந்தது இரண்டு கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில், ஒரு கிரகண காலத்தில் மூன்று கிரகணங்களும் நிகழக் கூடும்.

இந்நிலையில், இந்த ஆண்டின் சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நிகழவுள்ளது. முழு சந்திர கிரகணம் இந்த ஆண்டின் கடைசி கிரகணம் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதத்தின் இரண்டாவது கிரகணம். 

சந்திரன் ஒரு ரத்த நிலவாக இருக்கும், இது முழு சந்திர கிரகணத்தின் போது நிகழ்கிறது. முழு நிலவும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுகிறது, இது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது, இதன் விளைவாக சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும். இந்த முழு சந்திர கிரகணத்தை கொல்கத்தா உள்பட நாட்டின் கிழக்கு பகுதிகளில் காண முடியும்.

எஞ்சிய பகுதிகளில், பகுதி சந்திர கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடையும். முழு சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பலான பகுதிகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் காண முடியும்

அக்டோபர் 25 ஆம் தேதி ஒரு பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது, மேலும் நவம்பர் 8 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம். அடுத்த முழு சந்திர கிரகணம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி காண முடியும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com