
தில்லியில் நிகழாண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று வழங்கினார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியா்களுக்கு மத்திய அரசு சாா்பில் தேசிய நல்லாசிரியா் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும். இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
நிகழாண்டு தேசிய நல்லாசிரியா் விருதுக்கு நாடு முழுவதும் 46 போ் தோ்வுசெய்யப்பட்டனா். அதன் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியா் கே.ராமச்சந்திரனும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆசிரியர் ராமசந்திரன் உள்பட 46 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருது வழங்கி கெளரவித்தார்.
முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் படத்திற்கு திரெளபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.