என்ன ஆனது நித்யானந்தாவுக்கு? இலங்கைக்கு பறந்த அவசரக் கடிதம்

தன்னைத் தானே கடவுள் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தாவுக்கு என்ன ஆனது என்பது பல நாள் கேள்வியாக இருந்தாலும், தற்போது அதற்கான விடைகள் சற்றேறக்குறைய வெளியாகியிருக்கிறது.
என்ன ஆனது நித்யானந்தாவுக்கு? இலங்கைக்கு பறந்த அவசரக் கடிதம்
என்ன ஆனது நித்யானந்தாவுக்கு? இலங்கைக்கு பறந்த அவசரக் கடிதம்


தன்னைத் தானே கடவுள் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தாவுக்கு என்ன ஆனது என்பது பல நாள் கேள்வியாக இருந்தாலும், தற்போது அதற்கான விடைகள் சற்றேறக்குறைய வெளியாகியிருக்கிறது.

கடவுள் என்று கூறிக் கொள்பவரும், பாலியல் புகாருக்குள்ளானவருமான நித்யானந்தா, இலங்கைக்கு மருத்துவ புகலிடம் அளிக்கக் கோரி கடிதம் எழுதியிருக்கிறார்.

நித்யானந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கைலாசாவில் சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உள்கட்டமைப்புகள் இல்லாததால், அவசரமாக மருத்துவப் புகலிடம் அளிக்க வேண்டும் என்று நித்யானந்தா தரப்பிலிருந்து இலங்கை அதிபருக்குக் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், மிக அவசரம் என்பதும், கைலாசாவில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்பதும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்திருக்கும் தகவலில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இதுவரை தன்னைத் தானே கடவுள் என்று கூறிக் கொண்டிருந்த நித்யானந்தா, தற்போது கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், மிக அவசரமாக அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை எழுதியிருப்பது யார் என்று பார்த்தால், ஸ்ரீகைலாசாவினுடைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் நித்யபிரேமாத்மா ஆனந்த சுவாமி என்பவர்.

அவர் கூறியிருப்பது என்னவென்றால்,  நித்யானந்த பரமசிவனுக்கு மிக அவசரமாக மருத்துவ உதவித் தேவைப்படுகிறது, அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கைலாசாவில் இருக்கும் தற்போதைய மருத்துவ வசதிகள் அவருக்கு சிகிச்சையளிக்க போதுமானதாக இல்லை. அவரது உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான நிலைக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய முடியாமல், கைலாசாவிலிருக்கும் மருத்துவர்கள் திணறுகிறார்கள். தற்போது கைலாசாவில் இருக்கும் நித்யானந்தாவுக்கு, அங்கிருக்கும் மருத்துவ வசதிகள் போதவில்லை என்பதால் உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக கைலாசா நாட்டுடன் தூதரக உறவை ஏற்படுத்தி, நித்யானந்தா, விரைவாக இலங்கைக்கு வர உதவி செய்யுமாறும், நித்யானந்தாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு மட்டுமல்ல, அதற்காக பயன்படுத்தப்படும் அனைத்து மருத்துவ இயந்திரங்களுக்கும் கூட கைலாசாவே செலவை ஏற்கும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏதேனும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்பட்டால் அதனை வாங்கிக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும், எங்களுக்கு சிகிச்சை முடிந்த பிறகு, அதனை உங்கள் நாட்டிலேயே, லட்சோப லட்ச மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அங்கே விட்டுவிட்டு வந்துவிடுவோம் என்றும், திரும்பப் பெற முடியாத அரசியல் புகலிடம் கிடைத்தால், கைலாசா நாடு, இலங்கையில் பெரிய அளவில் முதலீடு செய்யவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு குஜராத்தில், கடத்தல் வழக்கில், நித்யானந்தாவின் இரண்டு சீடர்களை காவல்துறை கைது செய்ததைத் தொடர்ந்து நவம்பர் மாதம்  நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார். பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இவர் மீது உள்ளது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com