பிரபல இசையமைப்பாளர், பாடகர் பூபேன் ஹஸாரிகாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களை கௌரவிக்கும்பொருட்டு அவர்களது பிறந்த நாளில்/நினைவு நாளில்/சாதனை நாளில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி இசைப் பாடகர் பூபேன் ஹஸாரிகாவின் 96 ஆவது பிறந்தநாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.
1926 செப்டம்பர் 8ல் பிறந்த பூபேன் ஹஸாரிகா 10 வயதில் இசைத் துறைக்கு வந்தவர். அசாமைச் சேர்ந்த இவர் தனது 10 ஆவது வயதில் அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் முதல்முறையாக எழுதிப் பாடினார். தனது 12 வயதில் இந்திரமாலதி என்ற படத்தில் பாடினார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என இவரது பன்முகத் திறமை, அசாம் திரையுலகின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளையும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை கடந்த 2019லும் பெற்றுள்ளார். 1992ல் தாதாசாகெப் பால்கே விருதையும் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இந்திய அரசின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் உள்பட பல வாரியங்கள் மற்றும் சங்கங்களின் தலைவராகவும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
2011 நவம்பர் 5 ஆம் தேதி தனது 85 ஆவது வயதில் மறைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்

4வது காலாண்டில் ரூ. 64 கோடி லாபம் ஈட்டிய க்வெஸ் கார்ப்!
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK

ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

