இதுதான் குஜராத் மாடல்; பழங்குடியின கிராமத்துக்கு முதல் முறையாக குடிநீர்

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம், சதா கிராமத்தில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக குழாய் மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதான் குஜராத் மாடல்; பழங்குடியின கிராமத்துக்கு முதல் முறையாக குடிநீர்
இதுதான் குஜராத் மாடல்; பழங்குடியின கிராமத்துக்கு முதல் முறையாக குடிநீர்


ஆமதாபாத்: குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று பலரும் விளம்பரம் செய்து கொண்டிருக்கும் நிலையில், குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம், சதா கிராமத்தில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக குழாய் மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 250 பழங்குடியின குடும்பங்கள் வசித்த வரும் சதா கிராமத்தில் இருப்பவர்கள் தற்போதுதான் முதல் முறையாக குழாயைத் திறந்து தண்ணீரை பாத்திரங்களில் பிடிக்க பழகி வருகிறார்கள்.

ஆனால்  கூட அவர்கள் கொண்டாடி மகிழ இன்னும் வெகு தொலைவு பயணிக்க வேண்டும். ஏனென்றால் அந்த கிராமங்களுக்கு இதுவரை மின்வசதியோ சாலை வசதியோ கூட இல்லை.

ஆற்றின் அருகிலேயே அமைந்திருந்தாலும், பல்வேறு புவியியல் சவால்களால் இந்த கிராமத்துக்கு நேரடியாக சாலை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த முடியாமல் இருந்தது. ஆனால் பொறியாளர்கள் முயற்சி மேற்கொண்டு நேரடியாக குடிநீர் வழங்கும் வகையில் குழாய்களை பொருத்தி சாதனை படைத்தனர்.

இந்த கிராமத்துக்கு படகுப் போக்குவரத்தைத் தவிர வேறு எந்த பாதையும் கிடையாது. இதனால், அந்த கிராமத்துக்கு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்திவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததாக அரசுப் பொறியாளர் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com