ம.பி.யில் உணவு உட்கொண்ட 11 பேருக்கு உடல் நலக்குறைவு!

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இறந்த மூதாதையருக்கு அஞ்சலி செலுத்தும் சடங்கில் இனிப்பு உணவான கீர் உட்கொண்ட 11 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இறந்த மூதாதையருக்கு அஞ்சலி செலுத்தும் சடங்கில் இனிப்பு உணவான கீர் உட்கொண்ட 11 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

சைகோன் நகரில் சடங்கு நிகழ்ச்சியின்போது மக்களுக்கு கீர்(பாலினால் செய்யப்பட்ட இனிப்பு உணவு) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. 

அதன்பின்னர் அன்று மாலையே 5 பெண்கள் மற்றும் 2 சிறுமிகள் உள்பட 11 பேருக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சைகோன் சுகாதார மையத்தில் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, மாவட்ட மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டதாக டாக்டர் மயங்க் படிதார் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. 11 பேரில், பெண் ஒருவர் இரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உணவுத்துறை "கீர்" மாதிரியைப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார். கீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பால் கெட்டுப்போயிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதனால் விஷமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com