ரயில்வேயின் 8 மாத வருவாய் எத்தனை கோடி தெரியுமா?

இந்திய ரயில்வேயிக்கு கடந்த 8 மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் 2022 வரை 38 சதவீதம் அதிகரித்த
ரயில்வேயின் 8 மாத வருவாய் எத்தனை கோடி தெரியுமா?

இந்திய ரயில்வேயிக்கு கடந்த 8 மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் 2022 வரை 38 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: 
இந்திய ரயில்வேயிக்கு கடந்த 8 மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட ரூ. 26 ஆயிரத்து 271 கோடி அதிகரித்து சுமார் ரூ.95 ஆயிரத்து 486 கோடியாக உள்ளது.

பயணிகள் போக்குவரத்தின் மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 116 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.25 ஆயிரத்து 276 கோடி என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத இரு பிரிவுகளிலும் கடந்த ஆண்டை விட பயணிகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

நீண்ட தூர முன்பதிவு செய்யப்பட்ட விரைவு ரயில்களின் வளர்ச்சி, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்களில் இருந்ததை விட அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மற்ற பிற வருவாய் 50 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும், சரக்கு வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com