இந்திய பால்வளத்துறையின் தலைவர்கள் பெண்கள்தான்: மோடி பேச்சு

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால்வள உச்சி மாநாடு 2022-ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்திய பால்வளத்துறையின் தலைவர்கள் பெண்கள்தான்: மோடி பேச்சு

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால்வள உச்சி மாநாடு 2022-ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தவர், இந்திய பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான் என கூறினார். 

மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:  இந்தியாவில் 48 ஆண்டுகளுக்கு பின்னர் உலக பால்வள உச்சிமாநாடு நடைபெறுகிறது. 2014 இல் இந்தியாவில் 146 மில்லியின் டன்னாக இருந்த பால் உற்பத்தி, தற்போது 220 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது 8 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக பாலில் சுமார் 23 சதவீதத்தை கொண்டுள்ள இந்திய பால் துறை, ஆண்டுதோறும் சுமார் 210 மில்லியன் டன் பால்பொருள்களை உற்பத்தி செய்து, நாட்டில் சுமார் 8 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பால் உற்பத்தித் துறை மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளன. சிறிய அளவிலான பால் பண்ணையாளர்களின் கூட்டு முயற்சியால் இந்தியா உலகின் மிகப்பெரிய பால் பொருள்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. 

நாடு பால் வழங்கும் கால்நடைகளின் மிகப்பெரிய தரவுத்தளத்தை நாடு உருவாக்கி வருவதாகவும், பால் துறையுடன் தொடர்புடைய ஒவ்வொரு கால்நடைகளுக்கும் குறியிடப்பட்டு வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளாக, கால்நடைகளுக்கு, கட்டி தோல் நோய் அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும், அவற்றின் உயிரைக் காக்க, உள்நாட்டில், தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கறவை மாடுகளுக்கும் நோய் தடுப்பூசி போடப்படும். 

பால்பண்ணைத் துறையின் ஆற்றல் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இந்தியாவின் பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான் என மோடி கூறினார். 

உலகின் மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியாவில் பால் துறையின் உந்து சக்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர். சமச்சீர் பால் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே அரசின் கவனமாக உள்ளது என்றார்

இந்தியாவில் காணப்பட்ட டிஜிட்டல் புரட்சி பால் துறையையும் எட்டியுள்ளது என்று திரு மோடி கூறினார். இந்தியாவின் பால்பண்ணைத் துறைக்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் கட்டண முறை உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவ முடியும் என்றார்.

பால்பண்ணைத் துறையில் உற்பத்தியை அதிகரிக்க, பசு-ஆதார் என்ற பால் கால்நடைகளின் பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இந்தியா ஈடுபட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

மேலும், பிளாஸ்டிக் கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் மோடி கூறினார். 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கறவை மாடுகளுக்கும் நோய் தடுப்பூசி போடப்படும்.

விவசாயத்தில் ஒற்றைப்பயிர் வளர்ப்பு மட்டுமே தீர்வாகாது என்றும், பன்முகத்தன்மை தேவை என்றும் கூறிய பிரதமர், கால்நடை வளர்ப்புக்கும் இது பொருந்தும் என்றும் கூறினார்.

அதனால்தான் இன்று இந்தியாவில் உள்நாட்டு இனங்கள் மற்றும் கலப்பின இனங்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார். கோபர் தன் யோஜனா, பால் துறை வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கடந்த 1974 ஆம் ஆண்டு அரை நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் இதுபோன்ற உச்சி மாநாடு நடைபெற்றது. சிறு மற்றும் குறு பால் பண்ணையாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளிக்கும் கூட்டுறவு மாதிரியின் அடிப்படையில் இந்திய பால் தொழில்துறை தனித்துவமானதாக செயல்பட்டு வருகிறது. 

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், பால் உற்பத்தித் துறையின் மேம்பாட்டிற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதன் விளைவாக கடந்த எட்டு ஆண்டுகளில் பால் உற்பத்தி 44 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நான்கு நாள்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, 'ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்திற்கான பால்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், விவசாயிகள் மற்றும் கொள்கை திட்டமிடுபவர்கள் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் இந்திய பால் பண்ணையாளர்களின் கூட்டமாகும். 

இந்த மாநாட்டில் 50 நாடுகளில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com