மும்பை மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வழியாகச் சென்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, காரில் சென்றவருக்கு உதவுவதற்காக தனது காரை நிறுத்தி காரில் வந்தவரிடம் விசாரித்தார்.
மும்பையின் நெடுஞ்சாலையில் உள்ள விலே பார்லே பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எதிர் சாலை வழியாகச் சென்ற முதல்வர் ஷிண்டே, காரில் பயணித்தவருக்கு உதவுவதற்காக தனது காரை நிறுத்தி, கார் ஓட்டுநரிடம் என்ன ஆனது, ஓட்டுநரின் பெயரைக் கேட்டுள்ளார். பின்னர் தான் விக்ராந்த் ஷிண்டே என்றும் அவரிடம் அறிமுகம் செய்துள்ளார்.
கார் ஓட்டுநரிடம் முதல்வர் ஷிண்டே பேசும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தீப்பிடித்த காரின் அருகில் செல்ல வேண்டாம், உயிர் மிகவும் முக்கியம் என்று முதல்வர் ஷிண்டே கூறியுள்ளார். புறப்படுவதற்கு முன் உதவி செய்வதாக அவர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அம்பையில் திருக்குறள் அறக்கட்டளைக் குழு விழா

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு
47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு! - டிரம்ப்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

