ஆக்சிஜன் பற்றாக்குறை: கரோனா உயிரிழப்பை தணிக்கை செய்ய பரிந்துரை

கரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பை தணிக்கை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பை தணிக்கை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையின்போது கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 20 மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மாநில அரசுகளின் அறிக்கையை மேற்கோள்காட்டி பதிலளித்தனர்.

இந்நிலையில், சமஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கோபால் யாதவ் தலைவராக உள்ள சுகாதாரத்துறை நிலைக்குழு கூட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதாரத்துறைக்கு அளித்துள்ள பரிந்துரையில், இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய சுகாதாரத்துறை தணிக்கை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெளிப்படைத்தன்மையுடன் அரசு நிறுவனங்கள் தணிக்கை செய்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com