இனி வாட்ஸ்ஆப்பிலேயே பிஎன்ஆர், ரயில் ஸ்டேடஸ் அறியும் வசதி!

ரயில் பயணிகள், தாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கும் ரயிலின் ஸ்டேடஸ் மற்றும் பிஎன்ஆர் நிலவரத்தையும் வாட்ஸ் ஆப் மூலமாகவே அறிந்து கொள்ளும் வசதியை ஐஆர்சிடிசி ஏற்படுத்தியுள்ளது.
இனி வாட்ஸ்ஆப்பிலேயே பிஎன்ஆர், ரயில் ஸ்டேடஸ் அறியும் வசதி!
இனி வாட்ஸ்ஆப்பிலேயே பிஎன்ஆர், ரயில் ஸ்டேடஸ் அறியும் வசதி!


ரயில் பயணிகள், தாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கும் ரயிலின் ஸ்டேடஸ் மற்றும் பிஎன்ஆர் நிலவரத்தையும் வாட்ஸ் ஆப் மூலமாகவே அறிந்து கொள்ளும் வசதியை ஐஆர்சிடிசி ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்ல, இவற்றை பயன்படுத்துவதற்கும் வாட்ஸ்-ஆப் மூலமாகவே நீங்கள் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

இவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக, ரயில் பயணிகள் தங்களது ரயில் பயணத்தின் போது, தேவைப்படும் உணவை இதே வாட்ஸ்ஆப் மூலமாகவே ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்திய ரயில்வே பயணிகள், இனி பிஎன்ஆர் ஸ்டேட்டஸ், ரயில் தற்போது எங்கே இருக்கிறது என்ற ரயிலின் ஸ்டேட்டஸ் போன்றவற்றை வாட்ஸ்ஆப் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். மும்பையைச் சேர்ந்த ரயிலோஃபி என்ற துவக்க நிறுவனம் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப் மூலம் ஒரே தொடுதலில் ஐஆர்சிடிசி பயணிகள் தங்களது ரயில் பயணம் குறித்த தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ளலாம். இதற்காக பயணிகள் பல்வேறு ஆப்களை பதிவிறக்கம் செய்துகொண்டு, இதர தகவல்களை உள்ளிட்டு சில மணிகள் காத்திருந்து தகவல்களை தெரிந்து கொள்வதிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

சரி இந்த வசதியில் வேறு என்னவெல்லாம் இணைந்திருக்கிறது என்றால்.. ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது அடுத்த ரயில் நிலையம் என்ன?  இதர ரயில்களின் நேரம் உள்ளிட்ட விவரங்களையும் அறியலாம். 

இதற்காக ஒன்றுமே செய்ய வேண்டாம், உங்களது 10 இலக்க பிஎன்ஆர் எண்ணைத் தட்டினால் போதும், அந்த ரயில் பற்றிய அனைத்துத் தகவல்களும் இனி உங்கள் விரல் நுனியில் காத்திருக்கும். 

இந்த வசதி இல்லாமல், ஐஆர்சிடிசி பயணிகள் 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் ரயில் நிலவரத்தை அறியலாம்.
இந்த வசதியைப் பெற பயணிகள் என்ன செய்ய வேண்டும்?

 • 1. ரயிலோஃபையின் (Railofy) வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணான +91 - 9881193322 என்ற எண்ணை உங்களது செல்லிடப்பேசியில் சேமிக்க வேண்டும்.
 • 2. உங்கள் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்துவிட்டு புதிய வாட்ஸ்ஆப் லிஸ்டைப் பாருங்கள்.
 • 3. அதில் ரயிலோஃபை சாட்போட்டில் உங்கள் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணைப் பதிவிட்டு உங்களுக்குத் தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

  வாட்ஸ்ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்ய +91 7042062070 என்ற எண்ணை உங்கள் செல்லிடப்பேசியில் பதிவு செய்து, அந்த வாட்ஸ்ஆப் சாட்போட்டுக்குச் சென்று பிஎன்ஆர் எண்ணை பதிவிடவும்.

  பிறகு, எந்த ரயில் நிலையத்தில் உணவு வேண்டும் என்பதை தேர்வு செய்தால், நிறைய உணவகங்களை காண்பிக்கும்,

  பிறகு உணவகம் மற்றும் உணவைத் தேர்வு செய்துவிட்டால் போதும். உங்கள் ரயில் அந்த ரயில் நிலையத்தை அடையும் போது உங்களுக்கு உணவு வழங்கப்படும்.
   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com