வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாட்டில் மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 27 பேர் பலி, 10,753 பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாள்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. 

News image
Updated On :15 ஏப்ரல் 2023, 6:05 am

DIN


இந்தியாவில் கடந்த சில நாள்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 10,753 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.48.08.022 கோடியாக உயர்ந்துள்ளது. 

தில்லியில் 6 பேர், மகாராஷ்டிரத்தில் 4 பேர், ராஜஸ்தானில் 3 பேர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் தலா ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா மீட்பு விகிதம் 98.69 ஆக பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 220.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.