பிகாரில் போலி மதுபானம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

பிகாரில் போலி மதுபானம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 
பிகாரில் போலி மதுபானம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!
Updated on
1 min read


பிகாரில் போலி மதுபானம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 

மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள பிகாரில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மதுவிற்பனை நடைபெறுகிறது. இதனால் உயிர்ப்பலியும் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர்,பாகர்பூர், ஹர்சித்தி பகுதியில் போலி மதுபானம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இதுதொடர்பாக மதுவிலக்கு அதிரடிப் படை பணியாளர்கள் இருவர் மற்றும் 9 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

போலி மதுபானம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com