
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.
அம்ரித்பால் சிங்குடன் அவரின் பாதுகாவலரை கைது செய்து இரண்டு கார்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையத்தில் புகுந்து சூறையாடிய வழக்கில் அம்ரித் பால் சிங் தேடப்பட்டு வந்தார். அவரைக் கைது செய்வதற்காக பஞ்சாப் காவல் துறையினர் தில்லி காவல் துறையுடன் இணைந்து ஏப்ரல் 18 முதல் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதன் விளைவாக தற்போது அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை மோகா மாவட்ட காவல் துறையினர் தங்கள் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பபால்பிரீத் சிங்கை ஏப்ரல் 10ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.