மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 2ஆவது நாளாக போராட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :24 ஏப்ரல் 2023, 8:03 am

DIN

இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாஜகவைச் சோ்ந்த எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக 12 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தாா். இந்நிலையில் நாட்டின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் கடந்த ஜனவரி மாதம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் தொல்லை உள்பட பல்வேறு புகாா்களை கூறி தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். 

இதையடுத்து அவரை பதவி விலகுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வீராங்னைகள் கூறிய பாலியல் தொல்லை புகாா் குறித்து விசாரணை செய்ய பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 போ் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஜன. 24-ஆம் தேதி மத்திய விளையாட்டு அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் இந்த குழுவை அமைத்தாா். இந்நிலையில் மேரி கோம் தலைமையிலான குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துவிட்டது. ஆனால் இதுவரை அறிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது காவல் நிலையத்தில் செய்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், மேரி கோம் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்பட பல்வேறு மல்யுத்த நட்சத்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை ஜந்தா் மந்தரில் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கினா். அவர்களின் போராட்டம் இன்று 2ஆவது நாளை எட்டியுள்ளது. இதுகுறித்து பஜ்ரங் புனியா, கூறியதாவது, புகார் அளிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கும் மேலாகியும், இதுவரை எஃப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை. 

இந்த முறை நாங்கள் யாரையும் நிராகரிக்க மாட்டோம், போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்கலாம். எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு தில்லி காவல்துறைக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.