தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தெலங்கானா முதல்வரை 2 ஆண்டுகளாக சந்திக்கவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை சந்தித்து 2 ஆண்டுகள் ஆவதாக அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஏப்ரல் 2023, 7:43 am

DIN


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை சந்தித்து 2 ஆண்டுகள் ஆவதாக அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக எதிா்ப்பு நிலைப்பாட்டை தீவிரமாக முன்னெடுத்துள்ள சந்திரசேகா் ராவ், மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறாா். இந்தச் சூழலில், மாநில ஆளுநா் தமிழிசைக்கும் முதல்வா் சந்திரசேகா் ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மோதல்போக்கு நிலவி வருகிறது. மாநில அரசின் சில மசோதாக்களுக்கு ஆளுநா் தமிழிசை ஒப்புதல் அளிக்காமல் உள்ளாா். இதன் காரணமாக, ஆளுநரை முன்வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை மாநில அரசு பெரும்பாலும் புறக்கணித்து வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில்,

தெலங்கானாவில் எந்த நெறிமுறைகளும் பின்பற்றுவதில்லை. நீண்ட நாள்களாக முதல்வர் என்னை சந்திக்கவில்லை. ஆளுநருடன் முதல்வர் அவ்வப்போது விவாதிப்பது கட்டாயம் என்று அரசமைப்புச் சட்டத்தின் 167-வது பிரிவு கூறுகிறது. ஆனால் தெலங்கானாவில் இது நடக்கவில்லை. 2 ஆண்டுகளாக முதல்வரை சந்திக்கவில்லை. தெலங்கானாவில் ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே நல்லுறவு இல்லை. இதற்கு நான் காரணமல்ல என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.