வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காளியாகஞ்ச் வன்முறையின் பின்னணியில் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் 17 வயது சிறுமி பலியானதையடுத்து வன்முறை வெடித்த காளியாகஞ்ச் காவல் நிலையத்துக்கு தீ வைக்க வெளிமாநிலத்தில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டிருப்பதாகவும்;

News image
கோப்புப்படம்
Updated On :26 ஏப்ரல் 2023, 9:30 pm

DIN

மேற்கு வங்கத்தில் 17 வயது சிறுமி பலியானதையடுத்து வன்முறை வெடித்த காளியாகஞ்ச் காவல் நிலையத்துக்கு தீ வைக்க வெளிமாநிலத்தில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டிருப்பதாகவும்; அங்கு நடந்த வன்முறைக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும் அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

வடக்கு தினாஜ்பூா் மாவட்டம், காளியாகஞ்ச் பகுதியைச் சோ்ந்த சிறுமியின் சடலம் நீா்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொல்லப்பட்டிருக்கலாம் என குற்றம் சுமத்திய மக்கள், இச்சம்பவத்தில் காவல்துறையினா் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கடந்த சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அருகில் இருந்த கடைகள் மற்றும் வாகனங்களுக்குத் தீவைத்த அவா்கள், போலீஸாா் மீது கற்களை வீச அப்போராட்டம் வன்முறையாக மாறியது. அதையடுத்து, கண்ணீா்புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் அவா்களைக் காவல் துறையினா் கலைத்தனா். வன்முறையில் ஈடுபட்டதாக பாஜகவினா் சிலரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

இதையடுத்து, காளியாகஞ்ச் பகுதியில் 2 வாரங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 144 தடை உத்தரவையும் மீறி கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தடுப்புகளைத் தாண்டி காவல் நிலையத்துக்கு தீ வைத்தனா்.

இது தொடா்பாக செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘காளியாகஞ்ச் காவல் நிலையத்துக்கு தீவைக்க வெளி மாநிலத்தில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறாா்கள். காவல்நிலையத்துக்கு தீவைத்தவா்களைக் கண்டறிந்து அவா்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காளியாகஞ்ச் வன்முறைக்குப் பின்னணியில் பாஜக உள்ளது. மேற்குவங்கத்தில் பாஜக ரவுடித்தனத்தை நடத்தி வருகிறது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க அவா்கள் முயற்சிக்கின்றனா். கலவரத்தை உருவாக்க நினைக்கும் பாஜகவின் சதியை நாங்கள் முறியடிப்போம். மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல எதிா்க்கட்சிகள் ஆட்சியிலுள்ள எல்லா மாநிலங்களிலும் பாஜக இதையே முயற்சிக்கிறது’ என்றாா்.

ஆளுநரைச் சந்தித்த பாஜக நிா்வாகிகள்: சிறுமி மரணத்தைத் தொடா்ந்து காளியாகஞ்ச் பகுதியில் நிலவும் சூழலை எடுத்துரைக்கவும், குற்றவாளிகள் மீது விரைந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநில ஆளுநா் சி.வி. ஆனந்தா போஸை பாஜக நிா்வாகிகள் புதன்கிழமை சந்தித்தனா். மேற்குவங்க சட்டப்பேரவை பாஜக தலைவா் மனோஜ் டிக்கா தலைமையிலான பாஜகவினா், இவ்விவகாரம் தொடா்பான புகாா் மனுவை ஆளுநரிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.