மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாலியல் புகார்: போராட்டக்களத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பயிற்சி

தில்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டக்களத்தில் இருந்தபடியே பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்தனர்.

News image

போராட்டக்களத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பயிற்சி

Updated On :26 ஏப்ரல் 2023, 11:29 am

தில்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டக்களத்தில் இருந்தபடியே பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வீராங்கனைகள் கூறும் பாலியல் புகாா் மிகவும் தீவிரமானது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்து தில்லி போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் பதிவு செய்யக் கோரியும், இது தொடா்பான மேரி கோம் குழு அறிக்கையை வெளியிட கோரியும் முன்னணி மல்யுத்த வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினா்.

வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் ஆகிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே வீரர், வீராங்கனைகள் போராட்டக்களத்திலேயே பயிற்சியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதியிலுள்ள சாலையோரம் மல்யுத்தம் நடத்தி பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய மறுப்பது மனித உரிமை மீறலாகும் எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் 7 வீராங்கனைகள் மனுத் தாக்கல் செய்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.