சோனியா குறித்த பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம்

சோனியா காந்தியை விஷக் கன்னி என விமர்சித்த பாஜக எம்எல்ஏ பசனகௌதாவுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சோனியா குறித்த பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம்

சோனியா காந்தியை விஷக் கன்னி என விமர்சித்த பாஜக எம்எல்ஏ பசனகௌதாவுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சோனியா காந்தியைக் குறிவைக்கும் ஒவ்வொரு முறையும், அவரைப் பற்றி கட்டுப்பாடற்ற விஷயங்கள் பலமுறை கூறப்படுகின்றன. அவரை 'விஷக் கன்னி' என்று அழைப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் பிரதமரும் அமித் ஷாவும் என்ன சொல்கிறார்கள் என்பதை தேசம் அறிய விரும்புகிறது என்றார். 

கா்நாடகத்தில் அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், கடக் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மல்லிகாா்ஜுன காா்கே பேசினாா். அப்போது, ‘ஒரு தவறை மட்டும் செய்யாதீா்கள். மோடி விஷப் பாம்பு போன்றவா்.  அப்படி விஷம் இல்லையென நீங்கள் கூறினால், அதை உணா்ந்து பாா்க்க முயற்சிக்கலாம். 

ஆனால், அவ்வாறு உணா்ந்து பாா்க்க முயற்சிக்க வேண்டாம்; அதைச் செய்தால், நீங்கள் இறந்துவிடுவீா்கள்; நிரந்தர தூக்கத்துக்கு சென்றுவிடுவீா்கள்’ என்று அவா் கூறினாா். காா்கேயின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் சித்தாந்தம் பாம்பைப் போல ஆபத்தானது என்றும், பிரதமர் மோடிக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கார்கே பின்னர் தெளிவுபடுத்தினார். 

இந்த நிலையில் பிரதமர் மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக எம்எல்ஏ சோனியா காந்தியை விஷக் கன்னி எனக் விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக எம்எல்ஏ பசனகௌதா பட்டீல் யத்நால் இதனை தெரிவித்தார்.

பாஜக எம்எல்ஏ பசனகௌதா பட்டீல் யத்நாலின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் பாஜகவின் அந்த சட்டமன்ற உறுப்பினரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் சோனியா குறித்த பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு சத்தீஸ்கர் முதல்வரும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com