பேனா சின்னத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
சென்னை மெரீனா கடற்கரைப் பகுதி கடலில் பேனா சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரிய ரிட் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்தது.


சென்னை மெரீனா கடற்கரைப் பகுதி கடலில் பேனா சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரிய ரிட் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்தது.
மனுவை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தையோ அல்லது பசுமைத் தீா்ப்பாயத்தையோ அணுகவும் அனுமதி அளித்தது.
தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த மு. கருணாநிதி நினைவாக சென்னை மெரீனா கடற்கரையில் அவரின் நினைவிடத்துக்கு அருகில் கடலில் 134 அடி உயர பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. சுற்றுச்சூழல் காரணங்களைத் தெரிவித்து இந்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த நல்லதம்பி, நாகப்பட்டினத்தைச் சோ்ந்த சூசை அந்தோனி உள்ளிட்ட 8 மீனவா்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனா்.
பேனா சின்னம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘மனுவில் சுற்றுச்சூழல் தொடா்புடைய கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திலோ அல்லது உயா்நீதிமன்றத்திலோ முறையீடு செய்யலாம்’ என்று கூறியது.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரா்கள் கூறியதைத் தொடா்ந்து, அதற்கு அனுமதித்து, இந்த விவகாரத்தை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அமா்வு கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...