தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாஜக கூட்டணி, இந்தியா கூட்டணி எம்பிக்கள் தனித்தனியே ஆலோசனை!

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :8 ஆகஸ்ட் 2023, 5:38 am

DIN

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி, ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது அக்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியைப் பேசவைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வந்தன.

இந்நிலையில், இன்று முதல் மூன்று நாள்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டணிகளில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.