மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதே எங்களில் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக இன்று (ஆக. 9) விவாதம் நடைபெற்றது.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதன்மூலம் பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும். ஆனால், இந்த அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்வோம் எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


