தொடர்ந்து நோ பால் போடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி பதிலுரை

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நோ பால் வீசிக்கொண்டிருக்கின்றனர், ஆனால் ஆளும் கட்சி சதமடிப்பதாக மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து நோ பால் போடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி பதிலுரை

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நோ பால் வீசிக்கொண்டிருக்கின்றனர், ஆனால் ஆளும் கட்சி சதமடிப்பதாக மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது. 

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலுரை அளித்து வருகிறார். 

அவர் பேசும்போது, 'எங்கள் அரசு மீது நாட்டு மக்களின் நம்பிக்கை மீண்டும் காட்டப்பட்டுள்ளது.  நம்பிக்கையில்லா தீர்மானம் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இது கடவுளின் ஆசீர்வாதம் என்று நான் நம்புகிறேன். நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன்.

2018ல் நம்பிக்கையிலா தீர்மானத்தின் மீது சொன்னேன், இது எங்களுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல, எதிர்கட்சிகளுக்கான நம்பிக்கையில்லாத் தீர்மானம், அதன் விளைவாக அவர்கள் தேர்தலில் தோற்றுப்போனார்கள் என்றும் கூறியிருந்தேன்.

நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலே இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எப்பொழுதும் எங்களுக்கு அதிர்ஷ்டம்தான். இன்று மக்கள் ஆசியுடன் முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பாஜகவும் மாபெரும் வெற்றியுடன் மீண்டும் வரும் என்று நீங்கள் (எதிர்க்கட்சிகள்) முடிவு செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது. 

2019 தேர்தலிலேயே எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்கள் கொண்டுவந்துவிட்டனர் என்று பேசினார். 

நமது கவனம் நாட்டின் வளர்ச்சியில் இருக்க வேண்டும். இது காலத்தின் தேவை. கனவுகளை நனவாக்கும் ஆற்றல் நம் இளைஞர்களுக்கு உண்டு. ஊழலற்ற ஆட்சியையும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கியுள்ளோம். 

ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கின்றன. நாட்டுக்கு நீங்கள்(எதிர்க்கட்சிகள்) ஏமாற்றத்தைத் தவிர வேறு ஏதும் தரவில்லை.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நோ பால் வீசுகின்றனர், ஆளும்கட்சியான நாங்கள் சதமடிக்கிறோம். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல் நாளில் ராகுல் பேசாதது ஏன்? ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அவையில் ஒதுக்கப்பட்டு விட்டார். காங்கிரஸ் மக்களவைத் தலைவராக இருந்தும், கட்சி சார்பில் அவருக்கு மக்களவையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com