2028 ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரதமர் மோடி பேச்சு

2028 ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரதமர் மோடி பேச்சு

தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் 2028 ஆம் ஆண்டு இதேபோன்று நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Published on

தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் 2028 ஆம் ஆண்டு இதேபோன்று நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது. 

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலுரை அளித்து வருகிறார். 

அவர் பேசும்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமரிசித்து பேசினார். 'காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்கத் தெரியவில்லை. தேசத்தின் பலம் மீது காங்கிரஸுக்கு நம்பிக்கையில்லை. 

எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி மீது அக்கறை இல்லை; அதிகாரத்தின் மீதே ஆசை.

எதிர்க்கட்சிகள் என்னை குறிவைத்து அவதூறு பரப்புகின்றனர். கடந்த 3 நாளாள்க என்னை மிகவும் விமர்சித்தனர். எதிர்க்கட்சிகளின் வசை  சொற்களை நான் வாழ்த்துகளாக எடுத்துக்கொள்கிறேன். 

வங்கிகள் திவாலாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால், நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் லாபம் இரண்டு  மடங்காகியுள்ளது. அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்திக் கொண்டு வருகிறோம். 

வலுவான இந்தியாவுக்கான அடித்தளத்தை பாஜக அமைத்து வருகிறது.

பாஜக தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும். அப்போது 2028 ஆம் ஆண்டு இதேபோன்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com