50 வயது பெண்ணுக்கு ஏன் பறக்கும் முத்தம் கொடுக்கப் போகிறார்? காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு!

மக்களவையில் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் புதிததாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பிகார் மாநில சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார்.
50 வயது பெண்ணுக்கு ஏன் பறக்கும் முத்தம் கொடுக்கப் போகிறார்? காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு!

மக்களவையில் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் புதிததாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பிகார் மாநில சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாத்தின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாஜக எம்.பி.க்களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுப்பது போல சைகை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ராகுலின் இந்த செயலைக் கண்டித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்பட பலரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். 

இந்த நிலையில், மக்களவையில் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் புதிததாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பிகார் மாநில சட்டமன்ற உறுப்பினர் நீது சிங் பேசியுள்ளார். அவரது இந்த சர்ச்சை பேச்சு இந்த விவகாரத்தில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது. நீது சிங் பேசிய விடியோவை பகிர்ந்து பாஜகவைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

பாஜக செய்தித் தொடர்பாளர் சேஷாத் பூனாவாலா அந்த சர்ச்சைப் பேச்சின் விடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நீது சிங் பேசியதாவது: ராகுல் காந்திக்கு அதிக பெண் ரசிகைகள் உள்ளனர். அவர் எதற்காக 50 வயது நிரம்பிய பெண்ணுக்கு பறக்கும் முத்தம் கொடுக்க வேண்டும்? ஸ்மிருதி இரானியின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது எனப் பேசியுள்ளார். 

பெண்களுக்கு எதிரான காங்கிரஸ் அந்த கட்சியின் மூத்த தலைவர் மக்களவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதை பாதுகாத்துப் பேசுகிறது என சேஷாத்பூனாவாலா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com