தில்லியில் 21 கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சோதனையில் 21 கைத்துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்தவர் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
தில்லியில் 21 கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!
Updated on
1 min read

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சோதனையில் 21 கைத்துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்தவர் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பகுதியைச் சேர்ந்தவர் லால் சிங் சாதர்(32). தனது சொந்த மாநிலமான புர்ஹான்பூரில் இருந்து சட்ட விரோத ஆயுதங்களை தில்லி-என்சிஆர் பகுதியில் விற்பனை செய்து வந்தார். 

ஆகஸ்ட் 4-ம் தேதி தனது தொடர்புள்ள ஒருவருக்கு சரக்குகளை வழங்குவதற்காக ரிங் சாலையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் அருகே வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்தை சுற்றி வளைத்த காவல் துறையினர், 21 கைத்துப்பாக்கிகளுடன் சாதர் இன்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்யப்பட்டார். 

ஆயுதங்களை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைப்பதாகவும், அதற்காக இதை செய்து வருவதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com