நாடாளுமன்றத்தில் மணிப்பூரை விட்டுவிட்டு என்னைப் பற்றி பேச்சு.. ராபர்ட் வதேரா காட்டம்

நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இராணி என்னைப் பற்றி மோசமான தகவல்களை கூறுகிறார் என்று பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா காட்டமாக பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மணிப்பூரை விட்டுவிட்டு என்னைப் பற்றி பேச்சு.. ராபர்ட் வதேரா காட்டம்


புது தில்லி: மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி என்னைப் பற்றி மோசமான தகவல்களை கூறுகிறார் என்று பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா காட்டமாக பதிலளித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, பாஜக சார்பில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ராபர்ட் வதேரா, கௌதம் அதானியுடன் இருக்கும் புகைப்படங்களை கொண்டு வந்து காண்பித்தார்.

இது குறித்துப் பேசியிருக்கும் ராபர்ட் வதேரா, மணிப்பூர் மாநிலம் எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒரு மத்திய அமைச்சரோ, எனக்கு எதிரான தகவல்களை திரட்டிக்கொண்டுவந்து நாடாளுமன்றத்தில், அதுவும் அங்கே இல்லாத ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று விமரிசித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நேற்று பதிலளித்த வதேரா,  என்னை இழிவுபடுத்துவதையும் நாடாளுமன்றத்தில் எனது பெயரை தவறாகப் பயன்படுத்துவதையும் விட்டுவிடுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல், தொழிலதிபர் கௌதம் அதானியுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை அளிக்குமாறும் ஸ்மிருதி இராணியை வதேரா வலியுறுத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், தில்லியில் பேராடிய மல்யுத்த வீரர்களை ஏன் ஸ்மிருதி இராணி சென்று சந்திக்கவில்லை என்றும் வதேரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com