
மத்திய பிரதேசத்தில் கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாந்த் ரவிதாஸுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் மற்றும் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பட்டுமா கிராமத்தில் நடைபெற்ற பூமி பூஜையில், பிரதமருடன் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சௌகான், ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சாந்த் ரவிதாஸ் சிலைக்கு முன் பிரதமர் மோடி கைகூப்பி வணங்கினார். இந்த விழாவில், வரவிருக்கும் நினைவிடம் மற்றும் கோவில்களின் மாதிரியையும் பிரதமர் பார்வையிட்டார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக ஆளும் மாநிலத்திற்கு, ஒரு மாதத்திற்குள் பிரதமரின் இரண்டாவது வருகை இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.