76 ஆம் ஆத்மி மருத்துவமனைகளை திறந்து வைக்கும் பஞ்சாப் முதல்வர்!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில்  வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி 76 ஆம் ஆத்மி மருத்துவமனைகளை திறந்துவைப்பார் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தற்போது பஞ்சாபில் 583 ஆம் ஆத்மி மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் 403 மருத்துவமனைகள் கிராமப்புறங்களிலும், 180 நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ளன. இந்த மருத்துவமனைகளின் மூலம் 44  லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இலவசவமாக சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த மருத்துவமனைகளில் இதுவரை 20 லட்சம் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிதாக 76 ஆம் ஆத்மி மருத்துவமனைகளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திறந்து வைக்க உள்ளார். 40 அரசு மருத்துவமனைகளின் தரத்தை ஆம் ஆத்மி அரசு தரம் உயர்த்தவுள்ளது என்றார். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com