47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜார்க்கண்டில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை: ஆதரவாளர்கள் போராட்டம்!

ஜார்க்கண்டில் பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

News image
Updated On :14 ஆகஸ்ட் 2023, 7:00 am

DIN

ஜார்க்கண்டில் பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

லதேஹர் ஜிலா பரிஷத்தின் முன்னாள் துணைத் தலைவரான ராஜேந்திர பிரசாத் சாஹு சனிக்கிழமை மாலை பாலுமத் பகுதியில் உள்ள டூன் பள்ளிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். 

ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இடுப்பு, வயிறு மற்றும் காலில் குண்டு பாய்ந்ததில் திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சாலைகளை மறித்தும், டயர்களை எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சம்பவ இடத்தில் போலீஸார் வந்த போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.