இந்தியாவின் கழிப்பறை மனிதர் பிந்தேஷ்வர் பதக் காலமானார்: பிரதமர் இரங்கல்!

இந்தியாவின் கழிப்பறை மனிதர் என அறியப்பட்ட பிந்தேஷ்வர் பதக் இன்று (ஆகஸ்ட் 15) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 
இந்தியாவின் கழிப்பறை மனிதர் பிந்தேஷ்வர் பதக் காலமானார்: பிரதமர் இரங்கல்!
Published on
Updated on
1 min read

இந்தியாவின் கழிப்பறை மனிதர் என அறியப்பட்ட பிந்தேஷ்வர் பதக் இன்று (ஆகஸ்ட் 15) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

தூய்மை இந்தியா திட்டத்துக்கு முன்னதாகவே இந்தியாவில் பொதுக் கழிப்பறைகள் அதிக அளவிலான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர். பொதுக் கழிப்பறைகள்  குறித்து அவர் பல முன்னெடுப்புகளில் ஈடுப்பட்டபோது அவரது மாமனார் உள்பட பலரும் அவரைக் கிண்டல் செய்துள்ளனர். ஒருமுறை, தனது மாமனார் மருமகன் என்ன வேலை செய்கிறார் என்பதை வெளியில் கூறுவதற்கு கூட மிகவும் தயங்கியதாக பிந்தேஷ்வர் பதக் நினைவு கூர்ந்திருக்கிறார். 

பிந்தேஷ்வர் பதக் 1970 ஆம் ஆண்டு சுலாப் இண்டர்நேஷனல் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல்வேறு சுகாதாரம் சார்ந்த நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். திறந்தவெளி மலம் கழித்தலுக்கு எதிராக அவர் பல விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். அவரை ‘சானிடேசன் சாண்டா கிளாஸ்’ எனவும் அழைக்கின்றனர். பிகாரின் வைசாலி மாவட்டத்தில் பிறந்த இவர் அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகனின் அரவணைப்பில் இருந்து வந்துள்ளார். அவரது சுலாப் இண்டர்நேஷனல் மனித உரிமைகள், சமுதாய சீர்திருத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் ஈடுபட்டு வந்துள்ளது. அவரது இந்த சேவைகளுக்காக பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 

இந்த நிலையில், அவர் இன்று (ஆகஸ்ட் 15) அவரது 80 ஆவது வயதில் மாராடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: டாக்டர்.பிந்தேஷ்வர் பதக் அவர்களின் இழப்பு நாட்டுக்கு பேரிழப்பாகும். சமுதாய முன்னேற்றத்துக்காக தொலைநோக்கு சிந்தனையுடன் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் அவர். சுகாதாரமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை அவர் நிறைவேற்றியுள்ளார். தூய்மை இந்தியா திட்டத்துக்கு அவர் தனது சிறப்பான ஆதரவை வழங்கினார். அவரிடம் கலந்துரையாடும்போது சுகாதாரத்துக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்க முடியும். அவரது சேவைகள் பலருக்கு ஊக்கத்தை அளிக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com