
பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா எல்லையில் மூவர்ணக்கொடியை இறக்கும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டரி பகுதி அமைந்துள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டாரி - வாகா பகுதிகள் இருநாடுகளுக்கான எல்லையாக உள்ளது.
சுதந்திரநாளையொட்டி கொடியிறக்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அட்டாரி - வாகா எல்லையில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். எல்லையில் இந்திய ராணுவப் படையினரும், பாகிஸ்தான் படை வீரர்களும் பங்கேற்பார்கள்.
அங்கு பாரம்பரிய முறைப்படி தேசியக்கொடிக்கு மரியாதை அளித்து கொடியிறக்கப்படும். அதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான இரும்புக் கதவு மூடப்படும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...