சுதந்திர நாளையொட்டி காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியேற்றினார்.
நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் நிகழ்ச்சியில் தேசியக்கொடியேற்றினார்.

இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கார்கே, 'ஜனநாயகமும் அரசியலமைப்பும் நமது நாட்டின் ஆன்மா. இந்த சுதந்திர தினத்தில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம்' என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆந்திரம்: கோதாவரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 5 பேர் பலி

வதந்தி - 2 டீசர்!

கைகட்டி நின்றவர் இன்று எங்கள் இயக்கத்திற்கு அறிவுப் பரிசோதனைப் பற்றி பேசுகிறார் - சேகர்பாபு

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

