ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

கட்டணங்கள் பற்றிய வெளிப்படைத் தன்மை தேவை: ஆர்பிஐ

வங்கிகள் கடன்களை வசூலிக்கும் போது கட்டணங்கள் பற்றிய வெளிப்படைத் தன்மை தேவை என்று ஆர்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது.
Published on


வங்கிகள் கடன்களை வசூலிக்கும் போது கட்டணங்கள் பற்றிய வெளிப்படைத் தன்மை தேவை என்று ஆர்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது.

சில வங்கிகள் கடன்களை வசூலிக்கும் போது மறைமுக கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

மேலும், மாறுபட்ட வட்டி முறையிலிருந்து நிலையான வட்டிக்கு மாறும் போது கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வாருங்கள் என்றும், வட்டி முறையை மாற்றும் போது அபராதம் என கூடுதலாக கட்டணம் வசூலிக்காமல், விதிமுறைக்கு உள்பட்டே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, வட்டி முறையை நிலையான வட்டி முறைக்கு மாற்றும் போது, மாதத் தவணைத் தொகையை மாற்றிக் கொள்ளவோ, தவணைக் காலத்தை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது இரண்டையுமே மாற்றியமைத்துக் கொள்ளவோ அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அனுமதியுங்கள் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com