லடாக்கில் ராணுவ வாகனம் விபத்து: 9 வீரர்கள் பலி

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் பலியானார்கள்.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் பலியானார்கள். 
ஜம்மு-காஷ்மீர், கரு காரிஸன் பகுதியில் இருந்து லே அருகே உள்ள கியாரிக்கு ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் கியாரி நகருக்கு 7 கி.மீட்டர் தொலைவில் பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார். இத்தகவலை லடாக்கில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com