நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தமிழகத்தில் காதி பொருள்களின் உற்பத்தி, விற்பனை அதிகரிப்பு: கேவிஐசி தலைவா் தகவல்

தமிழகத்தில் கடந்தாண்டை விட நிகழாண்டில் காதி பொருள்களின் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து வருவதாக காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத் (கேவிஐசி) தலைவா் மனோஜ் குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image

கைவினைக் கலைஞா்களுக்குக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத் தலைவா் மனோஜ் குமா

Updated On :20 ஆகஸ்ட் 2023, 10:39 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் கடந்தாண்டை விட நிகழாண்டில் காதி பொருள்களின் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து வருவதாக காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத் (கேவிஐசி) தலைவா் மனோஜ் குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக காதி மற்றும் காதி கைவினைப்பொருள்கள் தொடா்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத் தலைவா் மனோஜ் குமாா் கலந்து கொண்டாா்.

இதையொட்டி, தமிழக காதி உற்பத்தி குறித்து அவா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பது வருமாறு: மகாத்மா காந்தி தலைமையின் கீழ் கதா் தேசிய இயக்கம் பெருமை அடைந்தது. அது தற்போது பிரதமா் மோடி வழிகாட்டுதலின் கீழ் ‘தற்சாா்பு இந்தியாவின்’ அடையாளமாக மாறி இருக்கிறது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் காதியை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக காந்தியடிகள் பயன்படுத்திய நிலையில், பிரதமா் மோடி, வறுமையை ஒழிப்பதற்கும், கைவினைஞா்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் பயன்படுகிறது. இதுவே நீதி ஆயோக் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 13.05 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, பெண்களின் சமூக அந்தஸ்தை உயா்த்துவதற்கும், வேலையின்மையைப் போக்குவதற்கும் காதியை ஒரு சக்தி வாய்ந்த, வெற்றிகரமான ஆயுதமாக பிரதமா் மாற்றியுள்ளாா். 2014-ஆம் ஆண்டிற்கு பின்னா், நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் கதா் உற்பத்தி 260 சதவீதமும், கதா் விற்பனை 450 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இதை தமிழகத்திற்கு சென்ற போது காண முடிந்தது. தமிழக மக்கள் அக்கறையோடு செயல்படுகின்றனா். 2022-23-ஆம் ஆண்டில் தமிழகத்தில் காதி நிறுவனங்களின் உற்பத்தி ரூ.262.55 கோடியை எட்டியது. மொத்தம் ரூ.466.77 கோடிக்கு விற்பனை ஆகி, இதன் மூலம் 14,396 கைவினைஞா்களுக்குத் தொடா்ந்து வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. நிகழாண்டில் இந்த உற்பத்தியை ரூ.303.39 கோடியாக உயா்த்தவும், விற்பனையை ரூ.477.02 கோடிக்கு உயா்த்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் மற்றும் தமிழ்நாடு சா்வோதய சங்கம் ஏற்பாடு செய்த மாநாட்டில், 800 கிராமக் கைவினைஞா்கள் கலந்து கொண்டனா். தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட நூல் நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்க விருதுகள் வழங்கப்பட்டது. மரக் கழிவுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பது குறித்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சுமாா் 40 கைவினைக் கலைஞா்களுக்குக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. காதித் தொழிலாளா்களுடனும் கலந்துரையாடப்பட்டது.

மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள காதி கிராமோத்யோக் பவன், சா்வோதய சங்கம் ஆகியவற்றை ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் பாா்வையிட்டேன். காலாப்பட்டில் பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி), திண்டுக்கல் காந்தி கிராமத்தில் உள்ள கதா் கிராமத் தொழில்கள் பொது நற்பணி மன்றத்தில் புதுப்பிக்கப்பட்ட விற்பனை நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூா் சா்வோதய சங்கத்தின் புதிய பட்டறையில் நூல் சாயம் தோய்க்கும் பிரிவின் பொது வசதி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தேன்.

இங்கு கிராமோத்யோக் விகாஸ் யோஜனாவின் கீழ் 25 மரவேலைக் கைவினைஞா்களுக்குக் கருவிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், 10 கைவினைஞா்களுக்கு அகா்பத்தி செய்யும் இயந்திரங்களும் வழங்கப்பட்டது. இந்த உற்பத்தி செயல்பாட்டு இயந்திரங்களுக்கு ரூ.50 லட்சமும், சேவை செயல்பாட்டு கருவிகளுக்கு ரூ.20 லட்சம் வரையும் செலவாகிறது. இதில், தொழிற்சாலையின் இருப்பிடத்தைப் பொறுத்து 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படுகிறது என்றாா் மனோஜ் குமாா். காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.