காங்கிரஸ் செயற்குழு மாற்றியமைப்பு

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவை மாற்றியமைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். 
காங்கிரஸ் செயற்குழு மாற்றியமைப்பு

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவை மாற்றியமைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி காங்கிரஸ் செயற்குழுவில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 39 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் செயற்குழுவில் பிரியங்கா காந்தி, சச்சின் பைலட், சசி தரூர் உள்ளிட்டோரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 
விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கமலேஷ்வர் படேலும் இடம் பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காங்கிரஸ் செயற்குழுவில் நீடிக்கிறார். காங்கிரஸ் பொறுப்பாளர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
காங்கிரஸ் செயற்குழுவு மட்டுமல்லாது 18 நிந்தர அழைப்பாளர்கள், 14 பொறுப்பாளர்கள், 9 சிறப்பு அழைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் செயற்குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com