ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ரயில் கழிப்பறையில் மாரடைப்பால் மருத்துவ மாணவர் உயிரிழப்பு!

ராமேசுவரத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த இளைஞர், ரயில் கழிப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 9:38 am

DIN

ஜெய்பூர்: ராமேசுவரத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த இளைஞர், ரயில் கழிப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சித்தூர்கர் பகுதியை சேர்ந்தவர் அக்‌ஷய்(வயது 22). இவர் செரிபியா நாட்டுக்கு அடுத்த மாதம் மருத்துவம் படிப்பதற்காக செல்லவிருந்தார்.

இந்நிலையில், குடும்பத்துடன் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் ராமேசுவரம் வந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

கஜுராஹோ - உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, கழிப்பறை சென்ற அக்‌ஷய்க்கு மாரடைப்பு ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.

உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அக்‌ஷய்யின் உயிரிழப்பை உறுதி செய்துள்ளனர்.

மருத்துவப் படிப்புக்கு வெளிநாடு செல்லவிருந்த இளைஞர், கோவிலுக்குச் சென்று வீடு திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.