நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அருமையான விடியோ

நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களுடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள், ஆதரவு தெரிவியுங்கள்
நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அருமையான விடியோ
Published on
Updated on
1 min read


நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்களுடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள், ஆதரவு தெரிவியுங்கள் என்று கூறி ஒரு அருமையான விடியோவையும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருபவர் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. புதிய கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடித்து வாழ்த்துவது, மக்களுக்கு உத்வேகம் ஊட்டும் வகையிலான இடுகைகளைப் பகிர்வது போன்றவற்றை தொடர்ந்து செய்து வருபவர்.

இந்த நிலையில், கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட மிக அருமையான விடியோ ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் மக்களுக்கும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், இந்த விடியோ கடந்த வாரம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவியது. ஆப்பிரிக்காவின் கேமரூனில் உள்ள ஒரு சிம்பன்சி தண்ணீர் குடிப்பதற்கு புகைப்படக் கலைஞர்களின் உதவியைக் கேட்டது; தண்ணீரைக் குடித்துவிட்டு, பின்னர் கைகளை மெதுவாகக் கழுவி அவருக்கு நன்றி செலுத்தியது.

இதன் மூலம் ஒரு பயனுள்ள அனுபவப் பாடம்: நீங்கள் வெற்றிபெற விரும்பினால், உங்கள் சமூகம் மற்றும் பணியிடத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள் மற்றும் ஆதரவளியுங்கள். இதன் மூலம், அவர்களால் நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்… என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com