எந்த தேவையையும் சமாளிக்க தயார்: கோல் இந்தியா

கோல் இந்தியா லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிரசாத் நாட்டில் போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும், தேவையிருப்பின் எந்தவொரு சாவலையும்  எதிர்கொள்ள நிறுவனம் தயாராக இருப்பதாக  தெரிவித்தார்.
எந்த தேவையையும் சமாளிக்க தயார்: கோல் இந்தியா

கோல்கட்டா: கோல் இந்தியா லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பி.எம்.பிரசாத் நாட்டில் போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும், தேவையிருப்பின் எந்தவொரு சாவலையும்  எதிர்கொள்ள நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

புதிய சுரங்கங்களை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள சுரங்கங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க நிறுவனம் பல முன்முயற்சிகளை செய்து வருவதாக 49வது ஆண்டு பொதுக்குழுவில் பங்குதாரர்களிடம் பிரசாத் தெரிவித்தார்.

நாட்டின் அதிகரித்து வரும் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய கோல் இந்தியா லிமிடெட் உறுதிபூண்டுள்ளது. மேலும் எந்தவொரு திடீர் தேவை அதிகரிப்பையும் சமாளிக்க தயாராக உள்ளது என்றார்.

நாட்டில் போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளது, அனல் மின் நிலையங்கள் மற்றும் கோல் இந்தியாவிடம் கிட்டத்தட்ட 80 மில்லியன் டன் நிலக்கரி உள்ளது என்று நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

2022-23 நிதியாண்டில் கோல் இந்தியா லிமிடெட் 703.2 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இந்த ஆண்டில் நிறுவனமானது 694.7 மில்லியன் டன் நிலக்கரி எடுத்து சாதனை படைத்துள்ள நிலையில் கோல் இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்து வருவதாகவும், அதன் சுரங்க நடவடிக்கைகளில் தூய்மையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி வேகம் வலுவாக இருப்பதாகவும், எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 186.95 மில்லியன் டன் நிலக்கரி சப்ளை செய்துள்ளோம் என்றார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.35,983 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com