சந்திரயான்.. நேற்று பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டப் பெற்றோர் திட்டம்!

சந்திரயான்-3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த சில நிமிடங்களிலேயே ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. 
சந்திரயான்.. நேற்று பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டப் பெற்றோர் திட்டம்!

சந்திரயான்-3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த சில நிமிடங்களிலேயே ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 

இந்நிலையில், கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையில் ஒரு பெண், 3 ஆண் குழந்தைகள் உள்பட நான்கு குழந்தைகள் சந்திரயான் நிலவில் தடம் பதித்த சற்று நேரத்தில் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயரிட அவரது பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். 

அரிபாடா கிராமத்தைச் சேர்ந்த மல்லிக்-ராணு தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  அவர்கள் கூறுகையில், குழந்தைக்கு சந்திரயான் என்ற பெயரை வைக்க பெரியோர்கள் பரிந்துரைப்பார்கள். 

சந்திரயான் என்பது சந்திரனுக்கு பயணம் செய்வது என்று பொருள். எனவே குழந்தைக்கு சந்திரா அல்லது லூனா எனப் பெயர் வைக்கலாம். சந்திரயான் என்பதும் ஒரு ஸ்டைலான பெயர் தான் என்று அவர் கூறினார். 

கேந்திரபாரா அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் அஞ்சனா சாஹூ நேற்று மாலை குழந்தைகளைப் பெற்றெடுத்த அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு சந்திரயான் பெயரை வைக்க ஆர்வமாக உள்ளதாக அவர் கூறினார். 

மருத்துவமனையின் கூடுதல் மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர். பி. கே பிரஹராஜ் கூறுகையில், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் குழந்தைகள் பிறந்ததால் பெற்றோர்கள் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

சந்திரயான் பெயரைக் குழந்தைகளுக்கு சூட்டுவதன் மூலம் சந்திரனில் இந்தியாவின் சாதனையை அவர்கள் கொண்டாட விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com