சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் புதன்கிழமை நிலவில் தடம்பதித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த சந்திரயான் - 3 விண்கலம் திட்டத்தின் உதவி இயக்குநர் கே. கல்பனா. 
சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்
Published on
Updated on
1 min read


இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் புதன்கிழமை நிலவில் தடம்பதித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த சந்திரயான் - 3 விண்கலம் திட்டத்தின் உதவி இயக்குநர் கே. கல்பனா. 

இந்த சந்திராயன் - 3 விண்கலம் திட்டத்தில் இடம்பிடித்தவர்களில் இவர் ஒருவர் மட்டுமே பெண் அல்ல. வடிவமைப்பு முதல் தடம்படித்தது வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் நேரடி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பணி இடம்பெற்றுள்ளது.

விக்ரம் லேண்டர், நிலவில் செங்குத்தாகச் சென்று திட்டமிட்டபடி தடம்பதித்து, நிலவின் தென் துருவத்துக்கு அருகே விண்கலனைச் செலுத்திய முதல் நாடு என்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்களில் நூற்றுக்கணக்கான பெண்களும் அடங்குவர்.

சந்திரயான் - 2 திட்ட இயக்குநர் எம். வனிதா, சந்திரயான் - 3 விண்கலத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அதுபோல ரிது கதிதாலின் பங்கும் அளப்பரியது. விண்கலனை கட்டமைப்பது, ஒருங்கிணைத்தல் போன்ற பல வேலைகளில் பெண் விஞ்ஞானிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்த திட்டத்தில், ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள் நேரடியாகப் பங்கேற்று உதவிகளை செய்துள்ளன.

பல ஆண்டுகாலமாக, இஸ்ரோவின் எண்ணற்ற திட்டங்களில், ஏராளமான பெண் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுபோல சந்திரயான் - 3 திட்டத்தின் வடிவமைத்தல், பரிசோதனை, செயல்படுத்துதல் போன்ற பணிகளிலும் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com